விளக்கேற்ற ஒரு திரியின் இரண்டு முனைகளை இணைத்தல் சரியான முறையா? எப்படி ஏற்ற வேண்டும் என்பதை விளக்கவும். மூன்று முறை பெருமாள் தீர்த்தம் ஸ்வீகரிக்கும் பொழுது என்ன சொல்லி ஸ்வீகரிப்பது ? (அகால ம்ருத்யு ஹரணம் தவிர்த்து வேறு ஏதாவது சொல்லும் வழக்கம் உண்டா? ) எந்தெந்த திதி, வார, நக்ஷத்ரங்களில் ப்ரஹ்மசாரி க்ஷௌரம் செய்து கொள்ளலாம் ? க்ஷௌரம் செய்யும் ஒவ்வொரு முறையும் புது யக்ஞோபவீதம் போடுவது உசிதமா ? வஸ்த்ரம் இல்லாமல் ஸ்வாமிக்குத் திருமஞ்சனம் செய்வது நம் ஸம்ப்ரதாயத்தில் உண்டா ? (பெருமானின் திவ்யமங்கள விக்ரஹத்திலே வஸ்த்ரம் இருப்பதால் நாம் வஸ்த்ரம் சாற்றி திருமஞ்சனம் செய்யவேண்டிய அவசியமில்லை என்பதாகச் சிலபேர் சொல்கிறார்களே ! அது எப்படி என்பதை சற்று விளக்கவும்

விளக்கை ஏற்றும் பொழுது இரண்டு தனித்தனி திரிகளை முறுக்கி ஏற்றினால் மிகவும் உசிதம். அப்படி முடியவில்லை ஒரு திரிதான் இருக்கிறது என்றால் அதை மடக்கி இரண்டு நுனிகளையும் சேர்த்து ஏற்றலாம். ஆனால் இரண்டு திரி போட்டது சிறிதாகிக்கொண்டே வருகிறது என்றால் அதைப் பிரித்து ஒரே திரியாக ஏற்றக்கூடாது.
ஒரு திரியை மடக்கி வைத்து விட்டோமேயானால் அது எப்பொழுது வரை உபயோகப்படுத்த முடிகிறதோ அவ்வளவு உபயோகப்படுத்தி விட்டு, பின் வேறு திரியை மாற்றிக் கொள்ளலாம். உத்தமகல்பமானது இரண்டு தனித்தனி திரிகளை முறுக்கிச் சேர்த்து ஏற்றுவது தான்.
மூன்று முறை பெருமாள் தீர்த்தம் ஸ்வீகரிக்கும் பொழுது பெருமாளிடம் பக்தியுடன் ஸ்வீகரித்தால் போதும் ஒன்றும் சொல்ல வேண்டியது இல்லை. மூன்று முறை ஸ்வீகரிப்பது விசேஷம் என்று ஆகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
க்ஷௌரம் செய்து கொள்வதற்கு
திங்கள் புதன் இது இரண்டும் விசேஷமானது. செவ்வாய் மற்றும் சனிக்கிழமை கூடவே கூடாது.
திதிகளைப் பார்க்கும் பொழுது ஏகாதசி முதலான விரத தினங்களில் கூடவே கூடாது.
என்னவானாலும் ஷஷ்டி திதி அடியோடு கூடவே கூடாது.
சதுர்த்தி, சதுர்தசி இவையெல்லாம் கூட கொஞ்சம் சாதாரணமானதுதான்.
அஷ்டமி, சதுர்தசி, அமாவாஸ்யை, பௌர்ணமி, ஏகாதசி, துவாதசி இவையெல்லாம் கூடாது.
வெள்ளிக்கிழமை க்ஷௌரம் பண்ணிக் கொண்டால் அம்மாவிற்கு ஆகாது. மாதா இல்லாதவர்கள் சில பேர் பண்ணிக் கொள்வார்கள். இதுபோல ஒவ்வொரு திதிக்கும் உண்டு.
திங்கள் புதன்கிழமையாக இருந்தால், முன் பின் இருந்தாலும் பண்ணிக் கொள்ளலாம் என்று சொல்வார்கள். ஆனாலும் ஷஷ்டியாக இருந்தாலோ இல்லை ஏகாதசி போன்ற விரத நாட்களாக இருந்தாலோ அன்று கூடாது.
நட்சத்திரங்களில் பரணி க்ருத்திகையில் பண்ணிக்கொள்ளக்கூடாது.
க்ஷௌரம் பண்ணிக்கும் போது ஸ்பர்ஷங்கள் பட்டு அசுத்தமாகும் வாய்ப்புகள் நிறையவுள்ளது.அதனால்தான் மாற்றிக்கொள்கிறார்கள்.
வஸ்த்ரம் இல்லாமல் ஸ்வாமிக்குத் திருமஞ்சனம் செய்வது நம் ஸம்ப்ரதாயத்தில் கிடையாது. சில தேசங்களில் செய்கிறார்கள் என்பதும் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top