1. ஜனன, மரண ஆஶௌச காலங்களில் சந்தியாவந்தனம் அனுஷ்டிக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி அறிய ஆவல். 2. மேலும் இரவு, பகல் என்று தொலை தூர பிரயாணங்கள் போது ஸ்நானம் செய்யாமல் ஜலம் இல்லாமல் மந்திரார்த்தமாகச் செய்யலாமா? 3. ஆஶௌச காலங்களில் சங்க்ரஹமாகச் செய்யவேண்டும் என்றும் காயத்ரி ஜபமும் பத்து எண்ணிக்கை செய்யலாம் என்றும் கூறுகிறார்கள். ஜனன, மரண என இரண்டு ஆஶௌசங்களுக்கும் ஒரே மாதிரி நியமங்களா அல்லது வெவ்வேறா? ஶாஸ்த்திரத்தில் இதைப் பற்றிய குறிப்பு இருக்கிறதா? விவரம் அறிந்து அனுக்ஷ்டிக்கத் திருவுள்ளம் பற்றி இருக்கிறேன்.

1. நீங்களே மூன்றாவது கேள்வியில் குறிப்பிட்டுள்ளீர்கள் சங்க்ரஹமாகச் செய்யவேண்டும், 10 எண்ணிக்கை செய்யவேண்டும் என்பதெல்லாம் ஜனன, மரண என இரண்டு ஆஶௌச காலத்திலும்தான். மேலும், அங்கந்யாஸ கரந்யாஸங்கள் செய்யும் வழக்கமில்லை. ஜபம், ப்ராணாயாம மந்திரங்களை வாயால் சொல்லக்கூடாது, மனதில் சொல்லிக்கொள்ள வேண்டும் என்பவைதான் நியமம்.
2. தூர பிரயாணங்கள் போது மந்திரார்த்தமாக சந்தியாவந்தனம் செய்யலாம். இருப்பினும் மறுநாள் ஜலமுள்ள இடத்திற்குச் சென்றபின் முதல்நாளுடைய சந்தியாவந்தனமும் சேர்த்து பண்ணவேண்டும்.
3. ஜனன மரண ஆஶௌசத்திற்கு ஒரே மாதிரியான சந்தியாவந்தன நியமம்தான். குறிப்பு என்று எதைக் கேட்கிறீர்கள் என்பது புரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top