ஒவ்வொரு பத்திலிருந்து ஒரு திருவாய்மொழி, அது திவ்யதேச விஷயமாகவோ அல்லது ப்ரதானமாக அர்த்தத்தைச் சொல்லக்கூடிய விஷயமாகவோ இருப்பதை பெரியவர்கள் கோயில் திருவாய்மொழியாக வைத்திருக்கிறார்கள். இதற்கென்று தனிப்பட்ட காரணம் கிடையாது. பெரியவர்கள் தங்கள் அனுபவத்தை அவ்வாறு வைத்திருக்கிறார்கள் என்பது மட்டும்தான்.