தசரதற்குச் சாபத்தால் புத்திர சோகம் வந்ததென்றால் எல்லோருக்கும் அவ்வாறாக வரவேண்டிய அவசியமில்லையே. எத்தனையோ பேருக்கு அவரவர்களின் கர்மவசத்தால் அவ்வாறு ஏற்படுகிறது. பெருமாள் ஶ்ரீராமனுக்கு கர்மா கிடையாது, கர்மவசத்தால் வந்ததும் அன்று. அவர் அபிநய ரூபமாக பண்ணுகிறார் என்பதுதான்.