கறவைகள் பாசுரத்தில் “கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்” என்று பாசுரத்திலேயே இருக்கிறது. ஆயர்குலத்திலே மாடு மேய்க்கும் சிறுவர்கள் கண்ணனுடன் கூட மாடுமேய்ப்பதற்குப் போய் மத்யான வேளையில் தயிர் சாதம் உண்டார்கள் என்று புராணங்களில் இருக்கிறது. பாலும் தயிரும் கிடைக்குமிடம், அவர்களுக்கு தயிர் சாதம் விசேஷம். அதன் ஞாபகமாக தயிர் சாதம் வைத்திருக்கிறார்கள். உண்போம் என்பதற்கு, எங்களுக்கு சாப்பிடதான் தெரியும் மற்ற உபாயங்கள் தெரியாது அதனால் ஶரணாகதி பண்ணுகிறோம் என்ற அர்த்தம் இங்கே.
உந்து மதகளிற்றன் அன்று புளியோதரை என்பது ஸம்ப்ரதாயத்தில் பெரியளவில் வழக்கத்தில் கிடையாது. சில இடங்களில் மட்டும் பண்ணுவார்கள். இந்தப் பாசுரம் பகவத் இராமானுஜர் உகந்த பாசுரம், அதனால் அன்று ஒரு விசேஷமான தளிகைப் பண்ணலாம் என்பதற்காகப் பண்ணுகிறார்கள்.