தேஶிக ஸ்தோத்ரங்களுக்கு நியதமாக இப்படியிப்படிப் பண்ணவேண்டும், இப்படிப் பண்ணக்கூடாது என்று க்ரமங்களெல்லாம் கிடையாது. அந்தந்தக் கோயில்களில் எப்படி வைத்திருக்கிறார்களோ அப்படிச் சொல்லவேண்டும்.
இந்தயிந்த நக்ஷத்திரங்களுக்கு இந்தயிந்த பத்ததி என்று சில சௌகர்யங்களுக்காக வைத்திருக்கிறாகள், விதி என்று கிடையாது. சில பலன்களுக்காக நாமே ஏறப்படுத்தியது. அது போல் ஸ்தோத்ர பாடங்களுக்கும் வெள்ளிக்கிழமை ஶ்ரீஸ்துதி, சனிக்கிழமை ஸுதர்ஶந அஷ்டகம் என்று சிலர் வைத்திருக்கிறார்கள். நியதமாக இல்லாததால் சொல்லப்படவில்லை.