எனது 9 வயது பெண் குழந்தை ஒரு ஸ்மார்த்தர் நடத்தும் கல்வி நிறுவனத்தில் படித்து வருகிறார். சாதுர்மாஸ்யம் சமயம் அவர்கள் அங்கு படிக்கும் குழந்தைகளை அவர்களின் ஸ்மார்த்த ஆசார்யனிடத்தில் சேவித்து ஆசிர்வாதம் வாங்க அழைத்துச் சென்றனர். அடியேனின் மகளுக்கு ஶ்ரீமதழகிய சிங்கரிடத்தில் பரந்யாஸம் ஆகிவிட்டது. எங்கள் குழந்தை அங்குப் படிக்கக்காரணம் அவர்கள் மாநில் மொழியுடன் சேர்த்து ஸம்ஸ்க்ருத மொழியும் சொல்லிக்கொக்கிறார்கள். மேலும் இதர நிறுவனங்கள் மேலைநாட்டுக் கலாச்சாரத்தை நோக்கி செல்லும் நிலையில், இவர்கள் நம் சனாதன தர்மம்படி கலாச்சாரம் சொல்லிக்கொடுக்கிறார்கள். பகவத் கீதை மற்றும் அமரகோஷமும் சொல்லிக்கொடுக்கிறார்கள். என் மகளுக்கு பரந்யாஸம் ஆகிவிட்டதால் பள்ளியில் மற்ற குழந்தைகளொடு இவளும் சென்று அவர்களின் ஆசார்யனைச் சேவித்தால் ஏதேனும் குற்றமாகுமா?

ஶாஸ்த்ரப்படி போகக்கூடாது. ஆனால் அவள் சிறு குழந்தை ஏன் சேவிக்கக்கூடாது என்று சொன்னால் அவளுக்கும் புரியாது, பிறர் கேட்டாலும் சொல்லத் தெரியாது.அதனால் இப்போது போவதனால் பெரிய குற்றமில்லை. சற்று பெரியவளான பிறகு ஏன் என்று சொல்லிக்கொடுக்கலாம் எனத் தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top