1008 காயத்ரி ஜபம் செய்யும்போது தீர்த்தம் பருகலாமா ? அடியேனின் ஆத்துக்காரர் (கணவர்) எப்பொழுதெல்லாம் “பிராமணார்த்தம்” செய்யச் செல்கிறாரோ, அதற்கு அடுத்த நாள் எங்கள் ஆத்து வாத்தியார் அவரை 1008 காயத்ரி ஜபம் செய்யச் சொல்லியிருக்கிறார். அதனால் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். ஜபம் செய்யும்போது அவருக்கு “தொண்டை உலர்ந்து போகிறது” என்று கூறுகிறார்.

ஜபத்திற்கு நடுவில் தீர்த்தம் பருக்கக்கூடாது. ஶ்ராத்தத்தில், அதாவது வருடாவருடம் செய்யும் ப்ரத்யாப்திக ஶ்ராத்தத்தில் ப்ராமணார்த்தமாக இருக்கும் ஸ்வாமிகள் 108 ஜபம் பண்ணால் போதும். 1008 பண்ணவேண்டிய அவசியமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top