அடியேன், நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் காமதேவனை ப்ரார்த்திக்கின்றாள். இதற்கு உத்தமூர் ஸ்வாமியின் வ்யாக்யானத்தில், “ஸ்வாமி தேசிகன், ஆண்டாள் நைமித்திக கர்மா செய்கிறாள் என்றும் மேலும் அவள் காமதேவனின் அந்தர்யாமியாக இருக்கும் எம்பெருமானைத்தான் ப்ராத்திக்கின்றாள் என்று கூறுகிறார்” என இருக்கின்றது. மேலும் , ஸ்வாமி தேசிகனின் “நாச்சியார் க்ருஷ்ணணைப் பெறுகைக்காகப் பண்ணின காமதேவார்சனம் ஶ்ருங்கார சமாத்யனுகுண க்ருஷ்ண ரூபாந்தர விஷயம்” என்ற வரிகளும் அந்த வ்யாக்யானத்தில் உத்தமூர் ஸ்வாமி குறிப்பிட்டுள்ளார். இவ்வரிகள் ஸ்வாமி தேசிகனின் எந்த க்ரந்தத்தில் வருகின்றது என்பதையும் தெளிவிக்க ப்ரார்த்திக்கின்றேன்.