ஸ்வாமி தேசிகன், பகவானின் பூர்ண, சக்தி மற்றும் ஆவேச அவதாரங்களைப் பற்றி தத்வத்ரயத்தில் சாதித்திருக்கிறார்.
எம்பெருமானின் பூர்ண அவதாரமென்பது இராம க்ருஷ்ணாதி அவதாரங்கள்.
அவரின் பல அவதாரங்கள் ஆவேச அவதாரம் தான், ஒரு ஜீவனுக்குள்ளே தானோ அல்லது தனது சக்தியை ஆவேசம் செய்து அவதார காரியங்களை நடத்திக் கொள்கிறான். அதற்கு ஆவேசவதாரங்கள் என்று பெயர். அந்த ஜீவனைப் பெருமாளே தேர்ந்தெடுக்கின்றார்.
உதாஹரணமாக பரசுராமர், இன்றளவும் இருக்கின்றார். ஆனால், அவரின் அவதாரமென்பது முடிந்து விட்டது. இங்கே, பெருமாள் தனது சக்தியை அவரின் உள் ஆவேசம் செய்து அவதார காரியத்தை நடத்திக்கொண்டார். அவரைப் போல்தான், வ்யாசர் முதலியவர்களும். இதைப்பற்றி விஸ்தாரமாக ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தில் சேவிக்கலாம்.