ஸ்ரீ வங்கிபுரத்து நம்பி தமது விரோதி பரிஹாரம் என்ற க்ரந்தத்தில் “பிராட்டிக்கு “ஸர்வேஷ்வரத்வம்” மற்றும் “ப்ரம்மைக்க லக்ஷணமான கரணத்வம்” இருக்கு என்ற நினைப்பே மோக்ஷத்திற்கு தடையாக மாறும் என்கின்றார். [Here is Vangipurathu Nambi’s Virodhi Pariharangal in Telugu script: https://archive.org/details/in.ernet.dli.2015.396199 And here is the specific page: https://imgur.com/a/c0NUyY1″] அப்படியானால் விஷ்ணுவும் பிராட்டியும் இருவேறு ஆத்மாக்களா? அல்லது ஒரு ஆத்மாவின் இரு உருவங்களா/ அவதாரங்களா? அதே போல் ஸ்ரீ, பூமி மற்றும் நீளா தேவிகளும் மூன்று வேறு ஆத்மாக்களா? அல்லது ஒரு ஆத்மாவின் மூன்று அவதாரங்களா? விளக்க ப்ரார்த்திக்கின்றேன். அடியேன் ராமானுஜ தாசன்.

ஸ்ரீ வங்கிபுரத்து நம்பி அருளியதாகச் சொல்லும் விரோதி பரிஹாரம், என்ற இந்த க்ரந்தத்தை ஸ்வாமி தேசிகன் முதலிய ஆசார்யர்கள் குறிப்பிடாததால் அதன் விவரம் தெரியவில்லை.
பிராட்டியும் பெருமாளும் இருவேறு ஆத்மாக்கள். ஸ்ரீ, பூமி, நீளா தேவிகள் மூன்று வேறு ஆத்மாக்கள். இதை ஸ்வாமி தேசிகன், சதுஶ் ஸ்லோகி பாஷ்யத்தில் விஸ்தாரமாக சாதித்துள்ளார். அதை ஆசார்யரிடம் இருந்து காலக்ஷேபத்தின் மூலம் கேட்டுத் தெரிந்துக்கொள்ளவும்.
குறிப்புகள்:
பல ப்ரமாணங்களை மேற்கோள் எடுத்துக்காட்டி ஸ்வாமி தேசிகன், தன்னுடைய க்ரந்தங்களில் பிராட்டிக்கு ஸர்வேஶ்வரத்துவம் சித்திக்கும் என்று கூறியிருக்கிறன்றார். மேலும், இந்த பிராட்டியின் விஷயத்திலேயே ஸ்வாமி தேசிகன், “தர்க்க பாண்டித்யத்தினாலே எதையும் சாதிக்க வல்லோமாய் இருக்க, நாம் ப்ரமாணஶரணராய்க் கோருகிறோம்” என்று சாதித்திருக்கிறபடியாலும், ஸ்வாமி தேசிகனே நமக்கு ப்ரமாணமான படியாலும் அவர் வழியே நாம் பின்பற்றுவோம், பிராட்டிக்கு ஸர்வேஶ்வர்த்வம் உண்டு எனத் தெளிவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top