த்ரோணாச்சார்யார், க்ருபாச்சார்யார் இவர்கள் எல்லாரும் சேர்ந்து அபிமன்யுவை வதம் செய்தது ந்யாயமில்லை என அனைவரும் ஒத்துக்கொள்ளக்கூடிய ஒன்று தான். ஆனால் யுத்த சமயத்தில், அவனை அப்படியே விட்டு விட்டால் ஆபத்து என்றும், சைன்யத்தை நாசம் செய்து விடுவான், இன்னும் சிலரை சகாயத்திற்கு கூட்டிக்கொண்டு வர இயலுவான் என்று யுத்தகளத்தில் அவர்கள் மனதில் எழுந்திருக்கும் ஆகையால் அதர்ம யுத்தம் செய்தாவது இவனை கொல்ல வேண்டும் வேறு வழியில்லை என்று நினைத்திருப்பர். இது போல் தான் பாண்டவர்களும் பல யுக்த்திகளைக் கையாண்டிருக்கிறார்கள்.
யுத்தத்தில் வேறு வழியில்லை எப்படியாவது வெற்றிபெற வேண்டுமென வரும் போது நிலைத்தவறி நடப்பது மஹாபாரத யுத்தத்தில் நாம் பார்க்கின்றோம்.
த்ரோணாச்சார்யார், க்ருபாச்சார்யார் இருவரும் ப்ராமணர்கள் என்ற கேள்விக்கு, ப்ராமணர்கள் சில சமயம் வேறு வழியில்லாது போனால் க்ஷத்ரிய தர்மத்தை எடுத்துக்கொள்ளலாம் என்றிருக்கிறது. அந்த ரிதீயில் தேசத்தைக் காக்க வேறு வழியில்லாமல் க்ஷத்ரிய தர்மத்தை எடுத்திருப்பார்கள் என்பதாக, சாமாதனத்திற்காக நாம் கொள்ளலாம்.