வராஹ அவதாரத்தில், எம்பெருமான் பூமாதேவியை ஜலப்ரளயத்திலிருந்து வெளியே கொண்டு வந்து ஹிரண்யாக்ஷனை சம்ஹாரம் செய்கின்றார். ப்ரளயத்தின் போது, எம்பெருமானின் நாபியில் அனைத்தும் (எல்லா உலகங்களும்) வைக்கப்படுகின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கு பூமி, ஹிரண்யாக்ஷன் இருப்பதைக் காண்கிறோம். இந்த நிகழ்வுகள் எப்பொழுது நடந்தன? சிருஷ்டிக்கு முன்பா அல்லது பின்பா? இதை தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்?

ஸ்ருஷ்டியில் ஆதிகாலத்தில் அதாவது ஸ்ருஷ்டி ஆரம்பிக்கும் பொழுது நடக்கின்ற ஸ்ருஷ்டிக்கு “ஸமஸ்த” ஸ்ருஷ்டி என்று பெயர்.
அதில் ஒவ்வொரு தத்துவத்தையும் பெருமாள் தனித்தனியாக ஸ்ருஷ்டித்து, அதிலிருந்து தான் இந்தப் பூமி முதலானவைகளைப் பெருமாள் ஸ்ருஷ்டிக்கிறார். அப்படி பண்ணும்பொழுது ப்ரம்மாண்டம் என்பதை ஸ்ருஷ்டித்து , அதில் ப்ரம்மாவை ஸ்ருஷ்டிக்கிறார். ப்ரம்மாவைக்கொண்டு பெருமான் மேலே ஸ்ருஷ்டிகளை நடத்துகிறார்.
இந்த இரண்டு ஸ்ருஷ்டிக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்தவை இவை. ப்ரம்மாவைக் கொண்டு பூமியில் இன்னும் ஜீவராசிகளை ஸ்ருஷ்டிக்கும் பொழுது அது முடியாமல் போகின்றது. அப்பொழுதுதான் இந்த பூமியை ஜலப்ரளயத்திலிருந்து வெளியில் கொண்டு வர இரண்யாக்ஷனை சம்ஹாரம் பண்ணி ப்ரம்மாவுக்கு பெருமாள் சகாயம் பண்ணுகிறார் என்பதாக இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top