அடியேன் USல் வசித்துவருகிறேன். எப்போதும் திருமண்காப்பு இட்டுக்கொண்டுதான் வெளியில் செல்வேன். சிலர் திருமண்காப்பு என்றால் என்ன என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு புரியும்படி எப்படி பதில் சொல்வது? சிலர் இதைக்கண்டு ISCKON அமைப்பை சேர்ந்தவரா என்று கேட்கின்றனர். அடியேன் ஸ்ரீவைஷ்ணவன் என்பதையும் அவர்களுக்கும் நமக்கும் இருக்கும் வித்யாசத்தை எப்படி தெரிவிப்பது?

திருமண்காப்பு என்பது பெருமாளுடைய திருவடிச் சின்னம். அந்தத் திருவடிச்சின்னத்தை தரித்துக் கொள்வதற்கு நாங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறோம் பெருமைப்படுகிறோம்.அது எங்களுடைய ப்ரீத்தியான பெருமாளுக்கு உகந்தது என்று சொல்லலாம்.
பொதுவாக மேற்கத்திய கலாச்சாரங்களில்(westernculture) Tatoo (பச்சை)போட்டுக் கொள்வது எல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமான நிச்சயமாக இருக்கின்றது. ஏன் Tatoo போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று ஒருவரை ஒருவர் கேட்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படிக் கேட்டால் பொதுவாக சொல்கின்ற பதில் இந்த Tatoo எனக்கு மிகவும் நன்றாக இருக்கிறது அதனால் போட்டுக் கொண்டிருக்கிறேன் என்று மிகவும் பெருமிதமாக சொல்லுவார்கள். அதேபோல் நாம் திருமண்காப்பு தரித்துக் கொள்வதென்பது நமக்குப் பிடித்த எம்பெருமானுக்கு உகந்த ஒரு கைங்கர்யம். அதனால் தரித்துக் கொண்டிருக்கிறேன் என்று பெருமையாக பதில் சொல்லலாம் எனத் தோன்றுகிறது.
ISKCON அமைப்பைச் சேர்ந்தவர்கள் நாம் என்று நினைத்துக் கொண்டு விட்டால் அப்படியில்லை என்பதை தெளிவித்து விட்டு, அவர்களுக்கும் நமக்கும் சில சம்ப்ரதாயக வேறுபாடுகள் இருக்கின்றன, சில philosophical differences இருக்கின்றன என்பதை சொல்லலாம். Philosophical differences என்ன என்பதை புரிந்து கொள்ளும் அளவிற்கு சக்தி இருந்தால் இந்த மாதிரி கேள்விகள் கேட்க மாட்டார்கள். அதனால் விளக்கமாக philosophical differences என்ன என்பதை செல்லும்படியான அவசியம் இருக்காது என்று தோன்றுகிறது. ஆகவே philosophical differences இருக்கு என்பதோடு முடித்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top