பெருமாளுக்குச் சாற்றிய துளசி மாலைப் பற்றிய சில கேள்விகள் அவரின் துளசி மாலையை ப்ரசாதமாக ஸ்வீகரித்து ஜபம், தர்ப்பணம், திருவாராதனத்திற்கு உபயோகிக்கலாமா? துளசி மாலையை தாமரை மணி மாலையோடுதான் அணிய வேண்டுமா? தனியாக அணியக்கூடாதா? துளசி மாலையை ஒரு நாள் முழுதும் அணியலாமா? அல்பஶங்கை சமயமும் அணியலாமா? தீட்டுச் சமயங்களில் அணியலாமா?

பெருமாளுக்குச் சாற்றிய துளசி மாலையை ப்ரசாதமாக ஏற்று ஜபம் தர்ப்பணம் திருவாதனத்திற்கு உபயோகப்படுத்தலாமா அதாவது நாம் போட்டுக் கொள்ளலாமா என்று கேட்கிறார் என்று நினைக்கிறேன். பெருமாளுக்குச் சாற்றிய துளசி மாலை நாம் கழுத்தில் அணிந்து கொண்டு பண்ணலாம், ஆனால் நாள் முழுவதும் அணிவது வழக்கம் கிடையாது.
அல்பஶங்கை மற்றும் தீட்டுச் சமயங்களிலும் அணியக்கூடாது.
தனியாக அணியலாம். துளசி மாலையில் ஒரு சின்ன விஷயம் அது என்னவென்று கேட்டால் அதை நிரந்தரமாக சாற்றிக் கொண்டிருக்க மாட்டார்கள். துளசி மாலையில் இரண்டு வகை இருக்கின்றது. ஒன்று துளசி இலையினால் செய்த மாலை மற்றொன்று துளசி மணியினால் செய்யப்பட்ட துளசி மணி மாலை அதாவது துளசி வடம். இந்தத் துளசி வடத்தை வைத்துக் கொண்டு ஜபம் தர்ப்பணம் திருவாராதனம் எல்லாம் பண்ணுவார்களே தவிர துளசி மாலை அதாவது துளசி ஜலத்தை வைத்து, துளசி இலை மாலையை வைத்துக்கொண்டு பண்ணுவது வழக்கம் கிடையாது. உங்கள் கேள்வி எதைப்பற்றி என்று தெரியவில்லை.
துளசி மணிமாலை(துளசி வடம்) என்று இருந்தால் அதைத் தாமரை மாலையுடனும் சேர்த்துக் கொள்ளலாம் இல்லை தனியாகவும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அதுவும் சுத்தமாக இருக்க வேண்டும் தீட்டுச் சமயங்களில் கூடாது, நாம் வெளியில் செல்கிறோம் பேருந்தில் செல்கிறோம் அப்பொழுதெல்லாம் தீட்டு கலக்கும் என்று இருந்தால் அந்தச் சமயங்களிலும் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top