மகர ரவி தர்ப்பணம் பற்றிய கேள்வி அடியேன் பஞ்சாங்கத்தில் சனிக்கிழமை மகர ரவி 43-52 என்று இருக்கிறது. அப்படியென்றால் மகரமாச தர்ப்பணம் என்று பண்ண வேண்டும்? சனிக்கிழமையா? அல்லது ஞாயிற்றுக்கிழமையா?

இந்த வருடம் சனிக்கிழமை இராத்திரி 43-52 ல் மாதம் பிறக்கிறது. ஆகையால் மறுநாள் காலையில் புண்யகாலம். அதாவது மறுநாள் ஞாயிற்றுக்கிழமை1(5 ஜனவரி) சூர்யோதயம் ஆனவுடன், அதாவது அவரவர் இருக்கும் இடத்தில் எப்போது சூர்யோதயம் ஆகிறதோ, ஆன நேரத்திலிருந்து 1 மணி நேரம் 32 நிமிடங்களுக்குள் மாசப்பிறப்பு தர்ப்பணம் பண்ணவேண்டும்.
குறிப்புகள்:
மகர ஸங்க்ரமணத்திற்குப் பிறகு 20 நாழிகை உத்தராயண புண்யகாலம்.
பகலில் மகரஸங்க்ரமணம் ஸம்பவித்தால் அன்றே புண்யகாலம். ஸூர்ய அஸ்தமனத்திற்குப் பிறகு மகரஸங்க்ரமணமானால் மறுநாள் புண்யகாலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top