ஶ்ரவண வ்ரதம் நிர்ணயம் ஶ்ரவண நக்ஷத்ர தினமும், ஶ்ரவண வ்ரத தினமும் வேறுபடுவது சாத்தியமா? ஶ்ரவண நக்ஷத்ரம் சூர்யோதயத்தில் இருந்து 12 நாழிகை இருக்கும் தினம் போதுமானதா ? அப்படியில்லாவிட்டால் முந்தைய தினத்தில் விரதம் அனுஷ்டிக்கலாமா ?

ஶ்ரவண விரதத்தில் இராண்டுவிதம் இருக்கிறது. ப்ரதானமாக ஒப்பிலியப்பனைக் குறித்து ஶ்ரவண விரதம் இருக்கிறவர்கள் அந்த ஸன்னிதி அனுஷ்டானத்தின்படி சூர்யோத்திலிருந்து 12 நாழிகை என்று திருவோண நக்ஷத்ரம் இருக்கிறதோ அன்று ஶ்ரவண விரதம்.
அப்படியில்லையென்றால் அதாவது 12 இல்லை 111/2 நாழிகைதான் இருக்கிறது என்றால் முன்னாள் ஶ்ரவண விரதம்.
சில பஞ்சாங்கங்களில் ஸாயங்காலம் ஶ்ரவண விரதம் என்று போட்டிருப்பார்கள். ஆகையால் அவரவர் வழக்கப்படி செய்யவேண்டும். நம் ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த பலர் ஒப்பிலியப்பன் சன்னிதி வழக்கத்தைதான் பின்பற்றுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top