ஸ்வாமி தேஶிகனுடைய ஸ்தோத்ரங்களை அனுசந்தானம் பண்ணும்பொழுது அவசியம் ஸ்வாமி தேஶிகனுடைய தனியனைச் சேவிக்க வேண்டும். இதர ஆசார்யர்களுடைய ஸ்தோத்திரங்களை அனுசந்திக்கும் பொழுது முதலில் ஸ்வாமி தேஶிகனுடைய தனியனைச் சேவித்துவிட்டு பின் அந்த ஆசார்யருடைய தனியனை சேவித்துவிட்டு அந்த ஸ்தோத்ரத்தைச் சேவிக்கலாம். அதில் தவறொன்றும் இல்லை. ஏனென்றால் ஸம்ப்ரதாயத்தை ஸ்தோத்திரங்கள் மூலமாக நமக்கு கொடுத்ததில் ஸ்வாமி தேஶிகனின் பங்கு மிகவும் அதிகம்.