சந்தியாவந்தனத்தை நாமாக சுருக்க உரிமை கிடையாது. தீட்டுக் காலத்தில் சுருக்கணும் என்றும், மற்றும் ப்ரதோஷ காலத்தில் சுருக்க வேண்டுமென சொல்லி பெரியோர்கள் பண்ணிக்கொண்டிருக்கிறார். நேரமின்மை என்பது காரணமாக ஆகாது. என்றாவது ஒருநாள் என்றால் சரி, அதற்கும் முன்னமே ஆரம்பித்துப் பண்ணலாம். உதயத்திற்கு முன்னரோ, அஸ்தமனத்திற்கு முன்னரோ பண்ணலாம். ஊருக்கு போகும் சமயம் சற்று சீக்கிரமாகப் பண்ணலாம். தாங்கள் குறிப்பிட்டவைகளில் அங்கந்யாஸம், கரந்யாஸம் விட்டு போயிருக்கு. அதை விட்டுவிட்டு பண்ணலாம் என்று சொல்ல அடியேனுக்கு உரிமையில்லை. சந்த்யாவந்தனம் சுருக்க நாம் யாருக்கும் உரிமையில்லை.

