A.அடியேனும் அடியேன் அகத்தவரும் வடகலை ஸம்ப்ரதாயத்தவர்கள்.நாங்கள் ஸம்ப்ரதாயப்படி பெரியதாக ஆசாரங்கள் கடைபிக்காவிட்டாலும் எம்பெருமான் மீது அளவில்லா பக்தி கொண்டவர்கள். பண்டிகைகளும் நன்றாகக் கொண்டாடுவோம். ஆனால் எங்கள் அடியேனின் அகத்துக்காரர் உட்பட அனைவருக்குமே பஞ்சஸம்ஸ்காரம் ஆகவில்லை. அடியேன் மட்டும் GSPKவின் ஸம்ப்ரதாய உபந்யாஸங்கள் மூலம் ஈர்க்கப்பட்டு USAவில் சின்ன ஜீயர் ஏளியிருக்கும்போது பஞ்சஸம்ஸ்காரம் செய்துகொண்டேன். அவரை ஆஶ்ரயித்து பஞ்ச ஸம்ஸ்காரம் செய்ததே ப்ரபத்தி செய்தது போல் ஒரு சந்தோஷமடைந்தேன். எப்போது இந்தியா வருவேன் என்று தெரியாது. மேலும் அடியேனின் அகத்துக்காரர் பஞ்சஸம்ஸ்காரமோ பரந்யாஸமோ எப்போது பண்ணிக்கொள்வார் என்று தெரியாது. நான் பரந்யாஸம் செய்யவேண்டுமா? செய்தால் சின்ன ஜீயரை இழிவு படுத்துவது போல் ஆகுமா? B.எங்கள் அகத்தில் 2 சாளக்கிராம மூர்த்திகள் ஏளியிருக்கின்றனர். நாங்கள் இருவருமே மானச திருவாராதனம் செய்து புஷ்பங்கள், நிவேதனம் செய்கின்றோம்.இருவரும் தனித்தனி பெட்டியில் ஏளியிருக்கின்றனர். அடியேன் அவர் முன் தேஶிக ஶ்ரீசூக்திகளை சேவிப்பேன். ஆனால் க்ரமமாக திருவாராதனம் என்று பண்ணுவதில்லை. இந்த உபசாரங்கள் மட்டுமே பண்ண முடிகிறது. இப்படியிருக்க எங்கள் அகத்தில் சாளக்கிராம பெருமாள் ஏளியிருக்கலாமா ? இதனால் ஏதேனும் தோஷம் ஏற்படுமா? C.மாமனார் பரமபதித்து ஒருவருடம் கூட ஆகவில்லை. இந்நிலையில் நாங்கள் நித்யம் அகத்தில் ஏளியிருக்கும் பெருமாளைச் சேவிக்கலாமா?

A.ஸ்வாமி தேஶிகன் ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்கள் அந்த ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த ஆசார்யனிடத்தே ஸமாஶ்ரயணம் பண்ணிக்கொள்வதுதான் சரி. மீண்டும் ஸமாஶ்ரயணம் பண்ணுவதால் தவறில்லை. கட்டாயம் பரந்யாஸம் செய்துகொள்ளவேண்டும்.
B.சாளக்கிராம மூர்த்தி அகத்தில் ஏளியிருப்பது நல்லதுதான் அவசியம் ஏளியிருக்கவேண்டும்.
C.மாமனார் பரமபதித்து ஒரு வருடம் ஆகவில்லையென்றால் கூட சுபம் ஆகியிருக்கும். ஆதலால் நித்யபடி பெருமாளைச் சேவித்துவிட்டு காரியங்களைப் பண்ணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top