அகத்துப் பெருமாள் சந்நிதியில் சாளக்கிராம பெருமாளுடன், திவ்ய தேசப் பெருமாள் படங்களுடன் மற்ற தேவதாந்திரங்களின் படமும் வைத்திருந்தால், நாம் சேவிக்கும் பொழுது, பிற தேவதாந்திரங்களையும் சேர்த்து சேவிக்கும்படி ஆகிவிடுகிறது. மிகவும் தர்ம சங்கடமான நிலை, அப்போது தோஷம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? சில பெருமாள் கோவில்களிலும் இந்த நிலைக்குத் தள்ளப்படுகிறோம், அந்த தேவதாந்திர சந்நிதிக்குப் போகாமல் தவிர்த்தாலும், பிரதக்ஷிணம் செய்யும் பொழுது பிற தேவதாந்திரங்களையும் சேர்த்து பிரதக்ஷிணம் பண்ணும்படி ஆகிறது.நாம் இருக்கும் இடம் திவ்ய தேசம் இல்லாததாலும், மனதில் கோவிலுக்குப் போய் பெருமாள் சேவிக்க வேண்டும் என்ற ஆசையாலும், இந்த தர்ம சங்கடமான நிலைக்கு ஆளாகி உள்ளோம். என்ன செய்ய வேண்டும் என்று உபதேசிக்க பிரார்த்திக்கிறேன்.

அகத்தில் பெருமாள் ஸந்நிதியில் தேவதாந்திர படங்களை வைத்துக் கொள்ளவே கூடாது. பெருமாள் ஸந்நிதி என்று மட்டும் இல்லை அகத்தில் வேறு எங்கேயும் தேவதாந்திர படங்களை வைத்துக்கொள்ளாமல்தான் இருக்கவேண்டும். அதனால் அநதப் படங்களை பெருமாள் சந்நிதியிலிருந்து முதலில் எடுத்து விடவேண்டும். அப்படி எடுத்து விட்டால் சேவிக்க வேண்டிய நிர்பந்தமே வராது.
வேறு ஊர்களில் கோவில்களில் வேறு சந்நிதிகளோடு சேர்ந்து பெருமாள் சந்நிதி இருக்கின்ற பக்ஷத்தில் வேறு வழியில்லை என்றால் பெருமாளை மட்டும் சேவித்து விட்டு, ப்ரதக்ஷிணம் பண்ணுவதைத் தவிர்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top