அகத்தில் தர்ப்பணம் பண்ணுபவர் இருக்கும் சமயம் அமாவாஸை போன்ற தினத்தில் அவருக்கென்று வாழைக்காய் போன்ற தர்ப்பண தினத்திற்கேற்ற தளிகையைப் பண்ணுகிறோம். அதே அகத்தில் தர்ப்பணம் பண்ண தகுதியல்லாதோர் அந்தத் தளிகையை உட்கொள்ளலாமா? அல்லது அவருக்கென்று வேறு ஒரு கரியமுது பண்ணவேண்டுமா?

அமாவாஸை தளிகை அகத்தில் எல்லோருமே உட்கொள்ளலாம். இரவு வேளையில் தர்ப்பணம் பண்ணுபவர்களுக்குப் பலகாரம். சில அகங்களில் தர்ப்பணம் பண்ணாதவர்கள் வெறும் பலகாரம் பண்ணக்கூடாது, கொஞ்சம் சாதமும் சேர்த்துச் சாப்பிட வேண்டும் என்ற வழக்கம் வைத்துக் கொண்டுள்ளார்கள். சில அகங்களில் எல்லோருமே பலகாரம் பண்ணலாம் என்றும் வழக்கும் வைத்துக்கொண்டுள்ளார்கள். அவரவர் அகத்து வழக்கப்படிச் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top