ஸந்த்யாவந்தனம் மற்றும் அஷ்டாக்ஷர ஜபத்திற்குப் பிறகு, நாம் த்வயம், சரம ஸ்லோகம் மற்றும் ஸ்ரீயை மந்திரங்களை ஜபிக்கிறோம். அஷ்டாக்ஷரம் மற்றும் த்வயத்தை 108 முறை ஜபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள், த்வயம், சரம ஸ்லோகம் மற்றும் ஸ்ரீயை மந்திரங்களை எத்தனை முறை சொல்ல வேண்டும்? “ஸம ஸங்க்யை” என்ற விதி அஷ்டாக்ஷரத்திற்கு மட்டும்தானா அல்லது த்வயம், சரம ஸ்லோகம் மற்றும் ஸ்ரீயை மந்திரங்களுக்கும் பொருந்துமா? நம் பூர்வாச்சார்யர்கள் இது குறித்து என்ன அருளிச் செய்துள்ளார்கள்?

காயத்ரி ஜபத்திற்கு “ஸம ஸங்க்யா” என்பது திருவஷ்டாக்ஷரத்திற்கு மட்டும்தான். அதாவது காயத்ரி எத்தனை செய்கிறோமோ அத்தனைமுறை திருவஷ்டாக்ஷரம் ஜபிக்கவேண்டும். மற்ற மந்திரங்களெல்லாம் நம்மால் எவ்வளவு முடியுமோ 10, 28 அல்லது 108 என்ற எண்ணிக்கையில் முடிந்தளவு பண்ணலாம் என்று ஸம்ப்ரதாயத்தில் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top