சுவாமின், அஷ்டகா தர்ப்பணம் என்றால் என்ன? அடியேன் இதைப்பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். தயவுசெய்து இதைப் பற்றி விளக்குமாறு வேண்டுகிறேன்

அஷ்டகா தர்ப்பணம் என்று கட்டாயம் செய்யவேண்டும். இது மாக மாதத்தில் வரக்கூடிய க்ருஷ்ணபக்ஷ அஷ்டமி (தை அமாவாஸ்யைக்குப் பின் வரும் க்ருஷ்ணபக்ஷ அஷ்டமியாக இருக்கும்). மாக மாதம் என்பது மக நக்ஷத்திரம் வைத்து வந்துள்ளது. மக நக்ஷத்திரத்திற்கு பித்ருகள்தான் தேவதா. அந்த மாக மாதத்தில் பித்ரு ஸம்பந்தம் இருப்பது விசேஷம். அதிலும் க்ருஷ்ணபக்ஷம் என்பது பித்ரு பக்ஷம் என்றாகும். அஷ்டமி என்பது பித்ரு திதி. ஆகையால் மாக மாத க்ருஷ்ணபக்ஷ அஷ்டமி என்பது பித்ருகளுக்கு விசேஷமாக இருக்கிறது. இதைதான் அஷ்டகா என்று சொல்வார்கள். பஞ்சாங்கத்தில் பார்த்து பெரியவர்களிடம் கேட்டு அவசியம் எல்லா வருஷமும் செய்யவேண்டியதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top