ஸந்தியாவந்தனம் பண்ணாவிட்டால் பாபம் ஏற்படும் என்று தெரிந்துகொண்டேன். ஒருவன் ப்ரபத்தி செய்யும் முன்னும் பின்னும் ஸந்தியாவந்தனம் செய்யவில்லையென்றால் பாபத்தோடு மோக்ஷத்திற்கும் தடை ஏற்படுமா?

ஸந்த்யாவந்தனம் பண்ணாவிட்டால் பாபம் ஏற்படும். அந்தப் பாபம் போனால்தான் மோக்ஷம் கிட்டும். அந்தப் பாபம் இருக்கும்வரை மோக்ஷ ப்ராப்த்தி ஏற்படாது. பாபம் போவதற்கும் பெருமாளே ஏதாவது வழி பண்ணுவார். அதாவது சிக்ஷா (தண்டணை) கொடுப்பார். அந்த சிக்ஷையை அனுபவிக்க வைத்து மோக்ஷம் கொடுக்கலாம்.
முக்கிய குறிப்பு:
எப்போதுமே எல்லாவற்றிற்கும் மோக்ஷத்தோடு ஸம்பந்தப் படுத்தாதீர்கள். ஸந்தியாவந்தனம் பண்ணாமல் இருந்தால், பொய் சொன்னால், கள்ளு குடித்தால் பாபம் வரும் என்று சொல்லியிருக்கிறது. இவையெல்லாம் பண்ணால் மோக்ஷம் கிடைக்காதா என்று தயவுசெய்து ஒவ்வொன்றிற்கும் மோக்ஷத்தோடு ஸம்பந்தப் படுத்தாதீர்கள். ஶரணாகதி செய்தால் மோக்ஷம் உண்டு என்பது தனி. மனுஷ்யன் மனுஷ்யனாக இருக்க வேண்டும். ப்ராஹ்மணன் ப்ராஹ்மணனாக இருக்கவேண்டும். ஒருத்தன் பொய் சொல்லுவான், மற்றொருவரை ஹிம்சை பண்ணுவான், தப்பு கார்யங்கள் பண்ணுவான், ஸந்த்யாவந்தனம் பண்ணமாட்டான் இருந்தும் மோக்ஷம் கிடைக்குமா என்று கேட்பது ந்யாயமற்றது. ஆகவே இதையும் அதையும் ஸம்பந்தப்படுத்தக் கூடாது.
மீண்டும் கூறுகிறோம் முதலில் மனுஷ்யன் மனுஷ்யனாக இருக்கணும். ப்ராஹ்மணன் ப்ராஹ்மணனாக இருக்கவேண்டும். அதை மட்டும் ஸம்பந்தப்படுத்திக் கேளுங்கள். கண்டவற்றையும் மோக்ஷத்தோடு ஸம்பந்தப் படுத்தாதீர்கள். மோக்ஷத்திற்குத் தடை உண்டா என்று கேட்பவர்கள் ஸந்த்யாவந்தனம் பண்ணாமல் தப்பிக்கும் வழியைத் தேடுகிறார்கள். இப்படிப்பட்ட மறைமுகமான குறிக்கோள் ஆபத்தானது ஆகையால் அதைத் தவிர்க்கவும்.
மனுஷ்யன் நல்லவனாக இருக்கவேண்டும், ஶாஸ்த்ரத்தை மதித்து, ஸ்வதர்மனாக இருக்கவேண்டும் என்பது பொதுவிதி. மோக்ஷம் என்பது விசேஷ விதி. இரண்டையும் குழப்பிக்கொள்ளக் கூடாது. ஸந்த்யாவந்தனம் பண்ணாமல் இருக்கக் காரணம் சொல்லக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top