a.உங்களால் முடிந்தவரை ஆசார்ய தரிசனம் செய்யவேண்டும். முடியவில்லையென்றால், தினமும் ஆசார்ய தனியனைச் சேவித்து த்யானித்துக் கொண்டிருக்கவேண்டும்.
b.ஆசார்யன் மேல் விஶ்வாசம் இல்லாவிட்டால் பெருமாள் மோக்ஷமளிபாரா என்ற கேள்வியைத் தவிர்க்கவும். ஆசார்யன் மேல் விஶ்வாசம் என்பது கட்டாயம் தேவை. விஶ்வாசமில்லாவிட்டால் பெருமாளே அந்த விஶ்வாசத்தைக் கொடுப்பார். மேலும் முக்கியமாக நாமும் அந்த விஶ்வாசத்தை வரவைத்துக்கொள்ளவேண்டும். ஆசார்யர்கள் அவருடைய ஆசார்யர்களின் தனியங்களை அனுசந்திக்க அனுசந்திக்க அது நமக்கு வரும்.

