தினமும் ஸந்தியாவந்தனம் செய்யாவிட்டால் பாவம் சேரும் என்று சொல்லப்படுகிறது. இது திருவாராதனத்திற்கும் பொருந்துமா? திருவாராதனம் ஒருநாள் செய்யாவிட்டாலும் பாவம் சேருமா?

திருவாராதனத்திற்கும் ஸந்தியாவந்தனத்திற்கும் ஒரு சிறிய வித்யாசமுண்டு. உதாஹரணத்திற்கு அகத்திலே ஒருவர் திருவாராதனம் செய்தால் போதுமானது, மற்றவர்கள் அதில் அந்வயித்து பெருமாள் தீர்த்தம் வாங்கிக்கொண்டால் போதும். ஆனால் ஸந்தியாவந்தனம் என்பது அப்பா, பிள்ளை, பேரன் என ஒவ்வொருவரும் ஸந்தியாவந்தனம் செய்யவேண்டும்.
ஆகையால் அகத்தில் யாரேனும் ஒருவர் திருவாராதனம் பண்ணவேண்டும். அகத்தில் பெருமாள் இருந்து திருவாராதனம் பண்ணாவிட்டால் அது தவறுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top